Slug
25 தாமரையின் கைவண்ணம் ரத்னாவை பார்த்து புன்னகைத்த தாமரை, "இன்னைக்கு சூர்யா சாரும் கூட விரதம் இருந்தாரு." என்றாள். "எனக்கு தெரியும்.""அவரும் விரதம் இருந்தாரே, அப்படின்னா அவரும் உங்களை உணருவாரா?""இல்ல, அவன் விரதம் இருந்தது உன்னை மாதிரி இல்ல. நீ இன்னைக்கு பூஜைக்காக நிறைய விஷயங்கள் பண்ண தானே?" "உங்களை பார்த்தா சூர்யா சார் ரொம்ப சந்தோஷப்படுவாரு. அவர் உங்களை பாக்க, நம்ம ஏதாவது செய்ய முடியாதா?" "அதெல்லாம் என்னை கட்டி இருக்கிற கட்டில் இருந்து நான் விடுபட்டா தான் முடியும்.""இதுக்கெல்லாம் பண்டிதர் அண்ணனால பதில் சொல்ல முடியும்னு நினைக்கிறேன். நான் அவர்கிட்ட கேட்கட்டுமா?" என்றாள் ஆர்வத்தோடு."நீ அப்படியா நினைக்கிற?" "ஆமாம்.""சரி, அப்போ, கேட்டு பாரு.""நம்ம இந்த உண்மையை சூர்யா சார் கிட்ட மறைக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன்." "இல்ல, தாமரை. இந்த உண்மை இந்த குடும்பத்துல இருக்கிற யாருக்கும் தெரிய கூடாதுன்னு எங்க அம்மா நினைக்கிறாங்க. என்னைப் பத்தி தெரிஞ்சா சூர்யா சும்மா இருக்க மாட்டான்." "ஆனா, பாட்டி ஏன் இதை யாருக்கும் தெரிய கூடாதுன்னு நினைக்கிறாங்க?""ஏன்னா, என்னை கொன்னது எங்க குடும்பத்தை சேர்ந்த ஒருத்தர் தான்." "என்ன சொல்றீங்க?" "ஆமாம். இதைப் பத்தி அம்மா மாயா கிட்ட பேசிகிட்டு இருந்ததை நான் கேட்டேன்." "ஓ..." "அந்த உண்மை தெரிஞ்சா, சூர்யாவுக்கு கோபம் வந்து வீட்டை தலைகீழா மாத்திடுவான்." "ஆனா, அவருக்கு இது தெரிய வேண்டியது அவசியம் இல்லையா?" "தெரியணும். ஆனா இப்ப இல்ல. சரியான நேரம் வரும் போது நிச்சயம் அவன் கிட்ட சொல்லலாம்." "ஆனா, ஏன் இந்த விஷயத்தை பாட்டிகிட்ட சொல்லாம வைக்க நினைக்கிறீங்க?" "இல்ல. நான் அவங்க கிட்ட சொல்லக்கூடாதுன்னு நினைக்கல. அவங்க நாளைக்கு தெரிஞ்சிக்குவாங்க. ஏன், சூர்யா கூட நான் இங்க இருக்கேன்னு சந்தேகப்பட ஆரம்பிக்கலாம்..." "நிஜமாவா? எப்படி?""அதை நான் உனக்கு நாளைக்கு சொல்றேன். இப்ப படுத்து தூங்கு." "சரி" என்று சோபாவில் படுத்து கண்களை முடிய அவள், திடீரென்று கண்களை திறந்தாள். "என்ன?" என்றார் ரத்னா."நீங்க போகலையா?""உனக்கு பயமா இருக்கா?"இல்லை என்று தலையசைத்து மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள். ஏதோ யோசித்த அவள் மீண்டும் கண்களை திறந்தாள்."இப்போ என்ன?" "உங்களால எதையும் தொட முடியாதா?" முடியாது என்பது போல் தலையசைத்து, அந்த மேஜையில் இருந்த குவளையை தொட முயன்றார். ஆனால் அவரால் அது இயலவில்லை. "என்னால உன்னை மட்டும் தான் தொட முடியும்."பெருமிசை விட்ட தாமரை, கண்களை மூடி கொண்டாள்."தாமரை..."தாமரை கண்களை திறந்தாள். "சொல்லுங்க." "ஒரு விஷயத்தை மறந்துடாத.""என்ன?" "உன்னால மட்டும் தான் என்னை பார்க்கவும் நான் பேசுறதை கேட்கவும் முடியும்." "அது எனக்கு தெரியுமே...""அதை எப்பவும் ஞாபகத்துல வச்சுக்கோ." சரி என்று தலையசைத்து விட்டு கண்களை மூடினாள். ரத்னா புன்னகைத்தார்.
ஷீலாவின் வீடு தன் அப்பாவின் முன் அமைதியாய் நின்றிருந்தாள் ஷீலா."நீ இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? கேட்கறதுக்கு பதில் சொல்லு.""எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல பா." "நீ சூர்யாவை காதலிக்கிற அப்படிங்கறதுக்கு மட்டும் தான் நாங்க அமைதியாக இருந்தோம். ஆனா அவன் உன் மேல எந்த விருப்பமும் காட்டுற மாதிரி தெரியல. எவ்வளவு நாள் நீ இப்படியே இருக்க போற? நீ எங்களோட ஒரே மக. நீ செட்டில் ஆகிறத பாக்குற விருப்பம் எங்களுக்கு இருக்காதா? இப்ப வந்திருக்கிறது ரொம்ப நல்ல வரன். என்ன செய்யப் போறேன்னு முடிவு பண்ணு. நீ சூர்யாவை கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு எந்த அப்ஜக்ஷனும் கிடையாது. ஆனா அவன் அதுக்கு தயாரா இல்ல. அதனால நான் பார்க்கிற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்கோ." "அப்பா எனக்கு சூர்யாவை பிடிச்சிருக்குன்னு தயவு செஞ்சு புரிஞ்சுக்கோங்க." "நான் அதைப் புரிஞ்சுகிட்டதால தான் உன்னை எந்தத் தொந்தரவும் செய்யாம காத்திருந்தேன். ஆனா இதெல்லாம் வேலைக்கு ஆகுற மாதிரி எனக்குத் தெரியல. கடைசியா ஒரு தடவை சூர்யாவை கேளு. அவன் உன்னை கல்யாணம் பண்ணிக்குவானா மாட்டானா?" "எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க." "நான் ஏற்கனவே உனக்கு நிறைய டைம் கொடுத்துட்டேன். நீயும் ரெண்டு வருஷமா அவனுக்காக காத்துகிட்டு இருக்க." "ஏற்கனவே ரெண்டு வருஷம் காத்துகிட்டு இருந்துட்டீங்க. இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்க கூடாதா?" "இது தான் லாஸ்ட் டைம்...""இந்த தடவை என்னால அதை செய்ய முடியலன்னா, நீங்க சொல்றதை நான் கேக்குறேன்." "நம்ம ஏன் அவங்க பாட்டி கிட்ட போய் உங்க கல்யாணத்தைப் பத்தி பேசக்கூடாது?" என்றார் அவளது அம்மா."இது ரொம்ப நல்ல ஐடியாவா தெரியுது. ஏன் நம்ம செஞ்சு பார்க்க கூடாது?" என்றார் அவளது அப்பா."செய்யலாமா வேண்டாமான்னு சொல்கிறேன்." சரி என்று தலைகசைத்தார் அவளது அப்பா. என்ன செய்வது என்று புரியாமல் விழித்தாள் ஷீலா. அவளுக்கு அவளது அப்பாவை பற்றி நன்றாக தெரியும். ஒரே பதிலை அவர்களிடம் அவள் திரும்ப திரும்ப கூறிக் கொண்டிருக்க முடியாது. அவள் ஏதாவது செய்தாக வேண்டும். உண்மையிலேயே சூர்யாவுக்கு அவள் மீது விருப்பம் இருக்கிறதா இல்லையா என்று தெரிந்து கொள்ள அவள் ஏதாவது செய்தாக வேண்டும். அவளுக்கு ஓர் யோசனை உதித்தது. அது நல்ல ஒரு முடிவை கொடுக்கும் என்று அவள் நம்பினாள்.
மறுநாள்கண் விழித்த தெய்வானை, கட்டிலில் அமர்ந்தபடியே தன் கால்களையும் கைகளையும் அசைத்தார். அது அவர் தினமும் காலை எழுந்தவுடன் செய்யும் எளிய உடற்பயிற்சி. அதை முடித்துக் கொண்டு குளியலறைக்கு சென்று குளித்து முடித்தார்.தாமரை இன்னும் உறங்கிக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவள் கன்னத்தை ரத்னா தட்ட, திடுக்கிட்டு கண் விழித்து, இங்கும் அங்கும் திகைப்போடு விழித்தாள். "பயப்படாத. நான் தான்." என்றார் ரத்னா. "உலகத்துலேயே என்னைத் தவிர வேற யாரும் இதை கேட்க முடியாது. ஒரு பேயே வந்து என்னை பார்த்து பயப்படாதன்னு சொல்லுது..." என்று அவள் பெருமூச்சு விட, வாய்விட்டு சிரித்தார் ரத்னா. "மெதுவா சிரிங்க. யாராவது கேக்க போறாங்க..." என்றாள் தாமரை. "உன்னால மட்டும் தான் என்னை பார்க்கவும், கேட்கவும் முடியும்னு நான் தான் உன்கிட்ட சொன்னேனே..." "ஆமாம்ல? சரி இப்போ என்னை எதுக்காக எழுப்புனீங்க?" "நீ எனக்காக ஒன்னு செய்யணும்.""என்ன செய்யணும்?""பால் பணியாரம்" அவரை திகிலோடு ஏறிட்டாள் தாமரை. "என்னை ஏன் பேயை பாக்குற மாதிரி பாக்குற?" என்று கேட்டுவிட்டு மீண்டும் கிண்டலாய் சிரித்தார் அவர்.தாமரை கண்களை சுழற்றினாள். "நான் பேயா இருக்கலாம். ஆனா உனக்கு இல்ல..." "நீங்க பேய் அப்படிங்கறத்துக்காக நான் உங்களை இப்படி பார்க்கல.""வேற எதுக்கு அப்படி பார்த்த?" "எல்லாரும் என்னை பார்த்து கிண்டல் பண்ணணும்னு நீங்க ஏதாவது பிளான் பண்றீங்களா?" "ஏன் அப்படி சொல்ற?""உங்க சீமந்த புத்திரன் இருக்காரே, அவர் அவ்வளவு சீக்கிரமா திருப்தி அடையவே மாட்டார்." "நீ எதை சொல்ற?""உங்க அம்மாவோட சமையலை அவர் எப்படி எல்லாம் குறை சொன்னார் தெரியுமா? அப்படி இருக்கும் போது என்னைப் பத்தி சொல்லவே வேண்டாம். அவருக்கு பிடிச்ச பால் பணியாரத்தை நான் செய்யப் போறதில்ல. வேற ஏதாவது செய்ய சொல்லுங்க. உங்களுக்காக நான் செய்றேன்." "அவன் உன்னை குறை சொல்ல மாட்டான். அது என் பொறுப்பு." "ஆனா எனக்கு பால் பணியாரம் செய்ய தெரியாதே" "நான் எதுக்கு இருக்கேன்? நான் சொல்லிக் கொடுக்கிறேன்." "ஓ..." என்றாள் நம்பிக்கையின்றி."வா போலாம்.""குளிச்சிட்டு வரேன்.""நீ குளிக்க நான் ஹெல்ப் பண்ணணுமா?" "இல்ல இல்ல" என்றாள் அவசரமாய். ரத்னா வாய்விட்டு சிரித்தார். குளிப்பதற்காக தன் அறைக்கு சென்றாள் தாமரை. அவள் கிளம்பி வரும் வரை அவளுக்காக காத்திருந்தார் ரத்னா. "உண்மையிலேயே நான் இதை செய்யணும்னு நினைக்கிறீங்களா?" என்றாள் தாமரை. "ப்ளீஸ், எனக்காக செய்யேன். என் பையனுக்கு அது ரொம்ப பிடிக்கும்." "எனக்கு தெரியும். அதுக்காகத்தான் எனக்கு தயக்கமா இருக்கு. அவரை மாதிரி ஒரு அம்மா பிள்ளையை நான் பார்த்ததே இல்ல." "சரி, சும்மா பேசிகிட்டு இருக்காத, வா." என்று அவள் கையைப் பிடித்து இழுத்துச் சென்றார் ரத்னா. வேறு வழியின்றி அவருடன் சென்றாள் தாமரை. தாமரை சமையலறையை நோக்கி அவள் கையை நீட்டியபடி செல்வதை பார்த்தார் மனோரமா. ரத்னா அவள் கையைப் பிடித்து இழுத்துச் செல்வதை பார்த்த அவருக்கு அப்படித் தானே தோன்றும்?"தாமரை..."அவரது குரலை கேட்டவுடன் ரத்னா அவள் கையை விட்டார். மனோரமாவை பார்த்தாள் தாமரை. "எதுக்காக கையை நீட்டிக்கிட்டே நடக்குற?" இன்னும் கூட நீட்டிய படி இருந்த அவள் கையை பார்த்து சட்டென்று அதை இழுத்துக் கொண்ட தாமரை, புன்னகையுடன் நின்று இருந்த ரத்னாவை பார்த்தாள்."அது... வந்து... நான்..." என்று அசட்டுத்தனமாய் வழிந்தாள். "எங்க போற?""கிச்சனுக்கு போறேன்.""எதுக்கு?""பால் பணியாரம் செய்யப் போறேன்.""என்னது, பால் பணியாரமா?" என்று நக்கலாய் சிரித்தார் மனோரமா.ஆம் என்று தலையசைத்தாள் தாமரை."உனக்கு பால் பணியாரத்தோட வரலாறு தெரியாதுன்னு நினைக்கிறேன்."தாமரை ரத்னாவை பார்க்க, அவர் அமைதியாய் இருக்கும்படி சைகை செய்தார்."ரத்னா இருக்காளே... அதாவது சூர்யாவோட அம்மா! அவ பால் பணியாரம் செஞ்சா அப்படி இருக்கும். இந்த வீட்ல இருக்கிற யாரும் நீ செய்யற பால் பணியாரத்தை தொடக்கூட மாட்டாங்க. அதனால நிறைய செஞ்சு வீணாக்காத. எங்களுக்கு பசுபதி டிபன் செஞ்சு கொடுப்பான்." சரி என்று தலையசைத்தாள் தாமரை."நீ அவளை சீரியஸா எடுத்துக்காத, வா." என்றார் ரத்னா."என்னை வச்சி செய்யணும்னு நீங்க முடிவோட இருக்கீங்க போல இருக்கு..." என்றாள் முகத்தை சோகமாய் வைத்துக் கொண்ட தாமரை. சமையல் அறைக்கு வந்த பிறகு, "என்ன செய்யணும்னு சொல்லுங்க." "நான் என்ன சொல்றேன்னோ அதை மட்டும் செய். ஒரு சின்ன விஷயத்தை கூட விட்டுடாத." என்றார் "சரி" என்ற தாமரை, அவர் என்ன கூறினாரோ அதை மட்டும் செய்ய தொடங்கினாள்.சமையல் அறைக்கு வந்த பசுபதி, தாமரை சமைத்துக் கொண்டிருப்பதை பார்த்து ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றார். "தங்கச்சிமா, உங்களுக்கு என்ன வேணுமோ நான் செஞ்சு தரேன்." என்றார்."நீங்க வழக்கமா என்ன செய்யணுமோ அதை செய்யுங்க அண்ணா.""நான் அதையெல்லாம் ஏற்கனவே செஞ்சு முடிச்சிட்டேன்." "நான் இதை சூர்யா சாருக்காகவும் பாட்டிக்காகவும் செய்றேன்"அனைவரும் சாப்பிடுவதற்காக உணவு மேசையில் கூறினார்கள், பாட்டியையும் சூர்யாவும் சேர்த்து. அன்றைய சிற்றுண்டியை உணவுமேஜைக்கு கொண்டு வந்த பசுபதி, அதை அனைவருக்கும் பரிமாறினார், பாட்டியையும் சூர்யாவையும் மட்டும் விட்டுவிட்டு."உங்களுக்கு தாமரை சமைச்சிருக்காங்க." என்றார் பசுபதி. சூர்யாவும் பாட்டியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். "அவளை நீங்க சமைக்க சொன்னீங்களா?""நீ சமைக்க சொன்னியா?" என்று ஒரே நேரம் இருவரும் கேள்வி எழுப்பினார்கள். தான் சமைத்த பால் பணியாரத்துடன் அங்கு வந்த தாமரை, அதை அவர்கள் இருவருக்கும் பரிமாறிய படி,"உங்களுக்காக நான் பால் பணியாரம் சமச்சிருக்கேன்." என்றாள். சில எகத்தாள நகைப்பொலிகளை கேட்டாள் தாமரை. தன் மகனின் பக்கத்தில் அமர்ந்து அவனை ரசித்தபடி இருந்த ரத்னாவை ஏறிட்டாள் தாமரை. அவளுக்கு தன் தலையை குட்டி சுவற்றில் முட்டிக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அவளோ இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் ரத்னாவோ, அவளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தன் மகனை ரசித்துக் கொண்டிருக்கிறார்.சூர்யாவும் தெய்வானையும் பால் பணியாரத்தை சுவைத்தார்கள். இருவரும் திகைப்போடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்."என்னால இதை நம்ப முடியல." என்றார் பாட்டி. சூர்யாவோ பெயர் கூற முடியாத முகபாவத்துடன் தாமரையை பார்த்தபடி அமர்ந்திருந்தான்."இது நல்லா இல்லையா?" என்றாள் தாமரை. "நல்லா இருக்காவா...? பிரமாதமா இருக்கு. அப்படியே என் மக செய்ற மாதிரியே இருக்கு!" என்றார் பாட்டி. தாமரை சூர்யாவை பார்க்க, அவன் அமைதியாய் சாப்பிட்டு கொண்டு இருந்தான். அஞ்சனாவும் மனோரமாவும் ஒருவரை ஒருவர் வியப்போடு பார்த்துக் கொண்டார்கள். அங்கு வைத்திருந்த பால் பணியாரத்தை எடுத்து இருவரும் சுவைத்துப் பார்க்க, அவர்களது முகம் மாறியது "ஆமாம், இது அப்படியே ரத்னா செய்ற மாதிரியே இருக்கு." என்றார் மனோரமா வெளிப்படையாகவே. அவர்களிடமிருந்து அதைப் பெற்று சுவைத்துப் பார்த்தான் ஷாம். அது போலவே சுதாகர் மனோகரும் கூட சாப்பிட்டார்கள். "எப்படி நீ ரத்னா செய்ற மாதிரியே செஞ்சிருக்க?" என்றார் அஞ்சனா."அப்படியா. இது ரத்னா அம்மா செய்ற மாதிரியே இருக்கா?" என்றாள் தாமரை. அவள் தன்னை அம்மா என்று அழைத்ததை கேட்ட ரத்னாவின் முகத்தில் புன்னகை துளித்தது. "தாமரை..." என்றார் ரத்னா. "ம்ம்?" என்றபடி ரத்னாவை நோக்கி திரும்பிய தாமரை, தன் நாக்கை கடித்துக் கொண்டாள். அதைப் பார்த்து சிரித்தார் ரத்னா."என் பேச்சுக்கு மத்தவங்க முன்னாடி ரியாக்ஷன் கொடுக்காத. உன்னை அவங்க பைத்தியம்னு நினைப்பாங்க." என்று சிரித்தார். முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு நகத்தை கடித்தாள் தாமரை. "என் பிள்ளையை பாரு... நீ சமைச்சதை சாப்பிட்டு அவன் எவ்வளவு எமோஷனல் ஆயிட்டான்..." அனிச்சையாய் ஆம் என்று தலையசைத்த தாமரையை, பாட்டி கவனித்துக் கொண்டிருப்பதை அவள் கவனிக்கவில்லை. சாப்பிட்டு முடித்த சூர்யா, ஒரு வார்த்தையும் கூறாமல் தன் அறைக்குச் சென்றது தாமரைக்கு ஏமாற்றத்தை தந்தது. அவளிடம் வந்த ரத்னா,"தாமரை, சூர்யாவோட ரூமுக்கு போய், நீ சமைச்சது எப்படி இருந்துதுன்னு கேளு." என்றார்.அவள் மாட்டேன் என்று தலையசைக்க, "அட, போன்னு சொல்றேன்ல? அவன் அதைப் பத்தி உன்கிட்ட தனியா சொல்லணும்னு நினைக்கிறான்னு நினைக்கிறேன்... போ..."சூர்யாவின் அறைக்குச் சென்றாள் தாமரை. அவன் பிரெஞ்ச் கதவின் அருகில் நின்று ரோஜா செடியை வெறித்துப் பார்த்தபடி இருந்தான். "சூர்யா சார்..."சூர்யா திரும்பவில்லை. அவன் அருகில் வந்த தாமரை,"நான் சமைச்சது உங்களுக்கு பிடிக்கலையா? எனக்கு தெரியும், உங்களுக்கு உங்க அம்மா சமச்சா தான் பிடிக்கும்னு... ஆனா நீங்க ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கணும். உங்க அம்மா சமைச்ச சாப்பாடு உங்களுக்கு மறுபடி கிடைக்காது..." என்ற அவளைத் தடுத்து, "எனக்கு கிடைச்சிடுச்சு..." என்று உணர்ச்சிவசப்பட்டு கூறிய அவன், அவளை நோக்கி திரும்ப, சிவந்திருந்த அவன் விழிகளை பார்த்து அவள் திகைத்தாள். "எனக்கு அது மறுபடியும் கிடைச்சிடுச்சு, உன் மூலமா." என்ற அவனுக்கு தொண்டை அடைத்தது. "சூர்யா சார், நான்..."அடுத்த நொடி, அவளை அவன் அணைத்துக்கொள்ள, தாமரையின் விழிகள் பெரிதாயின. அவள் சிலை போல் அசையாமல் நின்றாள். அங்கு ரத்னா இருக்கிறாரா என்று மெல்ல திரும்பிப் பார்க்க, அவர் அந்த இடம் விட்டு எப்பொழுதோ பறந்து விட்டிருந்தார், தாமரையை சங்கடப்படுத்த விரும்பாமல்.தொடரும்...

Bạn đang đọc truyện trên: LoveTruyen.Me